பிறைநிலவே,
விண்மீனின் குலமகளே !
கண்ணில் காதல் சுமக்கும்
கவிஞன் நான் ,
அங்கங்கத்தில் தங்கம் பொறித்த
ஓவியம் நீ .
வெண்மதியே,
விண்ணின் வெகுமதியே !
உயிர் கொடுக்கும் கொல்லன் ,
நான்.
உரு கொடுக்கும் கலைமகள் ,
நீ.
தென்றலே ,
தெவிட்டாத தேனமுதே !
அகத்திற்கு சுகம் சேர்க்கும்
கலைனன் நான் ,
புறத்தின் தாகம் தீர்க்கும் ,
தேனமுது நீ.
ஒளியே ,
எந்தன் உயிர் துளியே !
இணைவோம் இவ்வுலகில் ,
தொடர்வோம் நம் "பயணத்தை "
Posted by சகாய காட்சன். Posted In : கவிதைகள்